திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் மின்விளக்குகள் இல்லாமல் பல மாதங்கள் இருந்து வருகிறது. இதனால் மின்விளக்கு இல்லாமல் இருந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளே செல்வதற்கு அச்சத்துடன் சென்று வருவதோடு அல்லாமல் மர்ம நபர்கள் இதை பயன்படுத்தி ஏடிஎம் மையங்களுக்குள் சென்று வாடிக்கையாளர்களிடம் வழிப்பறி மற்றும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சிபதற்கு ஏதுவாக இருக்கிறது என சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை அடுத்து வங்கி நிர்வாகத்தினரிடம் பல முறை அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் வங்கி நிர்வாகிகள் மின்விளக்குகள் அமைப்பதற்கு அலட்சியம் போக்கு காட்டுகின்றனர் என தெரிவித்தார். இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளே செல்வதற்கு மொபைல் ஃபோனில் உள்ள வெளிச்சத்தில் மட்டும் பயன் படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஏடிஎம் மையத்திருக்குள் கண் பார்வை சரி இல்லாதவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி அடுத்தவர்கள் உதவியை நாடும் வகையில் உள்ளது. எனவே வங்கி நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக அங்கு உள்ள மின்விளக்குகளை எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment