திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு மாரியம்மன் கோவில் எதிர்ப்புறம் ஒரு வழிச்சாலையும், குடவாசல் சாலையும் இணையும் இடத்தில் நெடுஞ்சாலை துறையினர் சார்பில், சோலார் ஒளிரும்சிக்னல் விளக்கு அமைக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை செயல்பாட்டிலும் இல்லை.
அந்த சிக்னல் விளக்கு உள்ள பகுதியில், கீழ்பகுதியில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு மழைநீர் தேங்கி குட்டை போல் உள்ளதால் வாகனங்கள் வளைவில் திரும்பும் போது பள்ளத்தில் சிக்கிக் கொண்டு செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
எனவே சிக்னல் விளக்கையும், சாலை உள்ள பள்ளத்தையும் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment