குடவாசல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் மணமக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 6 November 2023

குடவாசல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் மணமக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள, குடவாசல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வடமட்டம் ஜோதி ராமன்-ராதிகா ஆகியோரின் மகன் டாக்டர் ஜே .சூர்யா நாராயணனுக்கும், திருச்சியை சேர்ந்த வக்கீல் ஜெ. செந்தில்நாதன் - எஸ். தேவகி ஆகியோரின் மகள் டாக்டர் எஸ்.  பவுத்திராவுக்கும் திருமணம்  திருச்சியில் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து இவர்களுக்கு திருமண வரவேற்பு விழா, குடவாசல் அடுத்துள்ள வடமட்டம் மணமகன் இல்லத்தில் நடந்த விழாவிற்கு தமிழ்நாடு இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டு  துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை  தாங்கி மணமக்களை வாழ்த்தினார். 


பின்பு நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை வடமட்டத்தில் திறந்து வைத்தார். பூண்டி கலைவாணன் எம். எல் .ஏ வரவேற்றார், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முன்னிலை வகித்தார். 


இவ்விழாவில் திருவாரூர் தொழிலதிபர் கனகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்  தலையாமங்கலம் பாலு, ஜி .எஸ்  ட்ரேடர்ஸ் உரிமையாளர் பொன்.கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன். ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உதுமான், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், வலங்கைமான்  வீ.அன்பரசன் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி உள்பட, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடவாசல் வடக்குஒன்றிய செயலாளர் வடமட்டம் எஸ். ஜோதிராமன் நன்றி கூறினார்.


- செய்தியாளர் தருண்சுரேஷ். 

No comments:

Post a Comment

Post Top Ad