மன்னார்குடி அருகே பைங்கநாடு கிராமத்தில் 4-ம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 8 October 2023

மன்னார்குடி அருகே பைங்கநாடு கிராமத்தில் 4-ம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது.


மன்னார்குடி அருகே உள்ள  பைங்கநாடு கிராமத்தில் T.ரெங்கராஜ் நினைவு கபாடி குழு நடத்தும் 4-ம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. இதில் மூன்று நாட்கள் நடைபெற்று 35 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது இதில் இறுதி நாளான இன்று 55 கிலோ எடை பிரிவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப் பரிசும் 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பைங்கநாடு கிராமத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டியில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கோவை, மதுரை,  சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 35 க்கும் மேற்பட்ட அணியினர் கலந்துகொண்டு விளையாடினார்.

இதில் வெற்றி பெற்ற அணிகள் இறுதி போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர். முதல் பரிசை முதலிடத்தை பெற்ற சென்னை சாய் அணியினருக்கு முதல் பரிசு 40 ஆயிரம் ரொக்க பணம் வெற்றி கோப்பை யும் ,  தமிழ்நாடு வனத்துறை காவல்துறையினர்  இரண்டாம் பரிசு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெற்றி கோப்பையும் , வடுவூர் டெல்டா அணியினர். மூன்றாம் பரிசு 20 ஆயிரம் ரூபாய் பணமும் , இளைஞர் வானவில் பரவாக்கோட்டை அணியினர் நான்காம் பரிசு 15 ஆயிரம் ரூபாய் பணமும் மற்றும் சிறந்த அணியிருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.  

 

இந்நிகழ்ச்சியில் வெங்கடாசலம், சுந்தரலெலின், ஜெயபண்டியன், துரை ராஜ், முருகானந்தம் பாராட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இதில் நிர்வாககுழு உறுப்பினர்கள்  T.R.விஜயபாரதி T,R,தங்கபாரதி , பைங்காநாடு ராஜேஷ், யோகநாதன், ராமகிருஷ்ணன் வெற்றி ,மற்றும் கிராம கமிட்டி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர் கபடி போட்டிகயை சுற்று வட்டாரத்தை சோ்ந்த கிராம மக்கள் ஏராளமனோர் கண்டு களித்தனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad