திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை குறித்த காலத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் கூறினார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 19 May 2023

திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை குறித்த காலத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் கூறினார்.


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் நிர்மல்ராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கணிப்பாய்வு அலுவலர் பேசியதாவது:- வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம். ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகள், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் நமக்கு நாமே திட்டம், கலைஞரின் மேம்பாட்டு திட்டம், மழை நீர் சேகரிப்பு, வருவாய் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு ெசய்யப்பட்டுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை குறித்த காலத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் கூறினார். பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டுவரும் எண்ணும், எழுத்தும் திட்டம், பள்ளி கட்டமைப்புகள், சாலை விரிவாக்க பணிகள் ஆகியவை குறித்தும் விவரங்கள் கேட்டறியப்பட்டது.


ஆய்வின் அடிப்படையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, அனைத்து துறைகளில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து துறைவாரியாக கணிப்பாய்வு அலுவலர் கேட்டறிந்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா, கீர்த்தனா மணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் ரா.பிரியங்கா. 

No comments:

Post a Comment

Post Top Ad