கூத்தாநல்லூர் அருகே சேகரை கிராமத்தில் அரசு அதிகாரிகள் சட்டவிரோத நபர்களுக்கு துணை போவதை கண்டித்தும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 18 May 2023

கூத்தாநல்லூர் அருகே சேகரை கிராமத்தில் அரசு அதிகாரிகள் சட்டவிரோத நபர்களுக்கு துணை போவதை கண்டித்தும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே சேகரை கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின்  பல்வேறு நிலைகளில் பாதுகாப்புக்கு உள்ளாகி வருகின்றனர் இதனை வலியுறுத்தி சேகர் கிராமத்தில் தொடர்ந்து பிச்சை எடுப்பு,  பாடை கட்டி ஊர்வலம் செல்லுதல், உருவ பொம்மை எரிப்பு என பல்வேறு கட்ட போராட்டங்கள் ஈடுபட்டு வந்தனர். இதனை செவி சாய்க்காத அரசு அதிகாரிகள் மெத்தன  போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில்  ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி  100க்கும் மேற்பட்டோர்  கிராம மக்கள்  குழந்தைகளோடு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சேகரை கிராமத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இதில் வீட்டுமனை பட்டா அல்லாமல் 100க்கும் வீடற்றவர்களாக இருந்து வருகின்றனர்.  இவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சேகரை வருவாய் கிராமத்தில் நில எடுப்பு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா உடனே வழங்க வலியுறுத்தியும், முன்னாள் முதல்வர் பெயரில் கலைஞர் நகர் என்று சேகரை கிராமத்தில் வைத்த பெயர் பலகையை அகற்றியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், சேகரை கிராமத்தில் கிராம மக்களுக்கு பல்வேறு கட்ட போராட்டத்திற்க்கு உறுதுணையாக இருந்து வரும் விவசாயி செந்தில்குமார் மீது கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் சேகரை கிராமத்தில் தொடர்ந்து அரசு அதிகாரிகள் சட்டவிரோத நபர்களுக்கு துணை போவதை கண்டித்தும் இதனை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad