திருவாரூர் அருகே இரண்டு பழமையான ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்களை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்து சிலைகளை பறிமுதல் செய்தனர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 May 2023

திருவாரூர் அருகே இரண்டு பழமையான ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்களை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்து சிலைகளை பறிமுதல் செய்தனர்.


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகன் சூர்யா இவர்கள் நன்னிலத்தில் உணவகம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது வீட்டில் தொன்மை வாய்ந்த ஐம்பொன் சிலை உட்பட சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை ஆய்வாளர் இந்திரா மற்றும் குற்றப் புலனாய்வு காவல்துறை ஆய்வாளர் லக்குமனன் தலைமையிலான போலீசார்  இவர்களது வீட்டில் சோதனை செய்த பொழுது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தன்வந்திரி ஐம்பொன் சிலையும் மற்றும் ராக்காயி அம்மன் வெங்கல சிலை மற்றும் 1010 ஆம் ஆண்டு உடைய இரண்டு நாணயங்கள் ஒரு காலசக்கரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தந்தை மகன் இருவரையும் கைது செய்து திருச்சிக்கு அழைத்து சென்றுள்ளனர். 


மிகப் பழமையான தன்வந்தி சிலைகள் விற்பனைக்காக விலை பேசி வந்ததாகவும் இந்த சிலையை மன்னார்குடி பகுதியை சேர்ந்த ஒருவர் விற்பனைக்காக வழங்கியதாகவும் சூர்யா போலீசாரின் விசாரணையில் தெரிவித்து உள்ளார் என தகவல்  தெரிவித்துள்ளனர்.


- செய்தியாளர் ரா.பிரியங்கா 

No comments:

Post a Comment

Post Top Ad