வரும் வழியெல்லாம் உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்பு அளித்தனர். இறுதியாக கலைஞர் அரங்கத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நண்பர் அண்ணன் நூற்றாண்டு விழா ஆயிரம் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மறைந்த மாவட்ட அவை தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்தமல்லி சோமசுந்தரம் படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தொடர்ந்து அவர் பேசிய போது: திருவாரூர் டெல்டா மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் முதலமைச்சரே இந்த டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் தான். இப்போது அமைச்சராக உள்ள நானும் டெல்டா மாவட்டத்துக்காரன் தான். முதல்வர், அமைச்சர்கள் தொடர்ந்து திருவாரூர் வருகின்றனர். நானும் வந்துகொண்டிருக்கிறேன்.

கலைஞர் பெயரில் ஒரு அறக்கட்டளை உள்ளது. அதிலிருந்து மாதம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மருத்துவ செலவிற்கு வழங்கபட்டு வருகிறது. இதுவரை ரூ 6 கோடி வரையில் கலைஞர் அறக்கட்டளை வாயிலாக முன்னோடிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் இளைஞரணி சார்பில் கடந்த 3 மாதங்களில் மட்டும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு ரூ. 60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களில் 25 மாவட்டங்களில் ரூ.26 கோடி மருத்துவ உதவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடத்தப்பட்டது. அதில் திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சி பற்றி பேசினோம். கட்சியின் மூத்த முன்னோடிகள் தான் திராவிட இயக்க வரலாறு.
இந்த கூட்டத்தில் எனக்கு சின்னவர் என பட்டப்பெயர் கொடுத்து அழைத்தனர். எனக்கு இதில் நம்பிக்கை கிடையாது. ஆனால் இந்த மேடையில் சின்னவர் பட்டப்பெயர் பொருந்துகிறது. இங்கிருப்பவர்களில் நான் ரொம்ப சின்னவன் என்பதால் இந்த பட்டப்பெயர் பொருத்தமானது. வயதிலும், அனுபவத்திலும் சின்னவன்.

அதனால், கட்சியின் மூத்த முன்னோடிகளை பார்க்கையில் பெருமையும், பொறாமையும் ஏற்படுகிறது. இங்கிருக்கும் முன்னோடிகள் அனைவருமே எனக்கு அண்ணா, கலைஞரின் மறு உருவமாக தெரிகின்றனர். என உதயநிதி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- செய்தியாளர் - ரா.பிரியங்கா
No comments:
Post a Comment