பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது இது குறித்து நாளை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என திருவாரூரில் உதயநிதிஸ்டாலின் பேட்டி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 4 April 2023

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது இது குறித்து நாளை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என திருவாரூரில் உதயநிதிஸ்டாலின் பேட்டி.


திருவாரூர் மாவட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்லூரி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். முதல் நிகழ்ச்சியாக பல்வேறு திட்டங்கள் குறித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது, பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் தற்போது நடைபெற்றதாக தெரிவித்தார். மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது இது குறித்து நாளை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் ரா.பிரியங்கா. 

No comments:

Post a Comment

Post Top Ad