நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகளை தொடங்க விவசாயிகள் கோரிக்கை. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 27 January 2023

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகளை தொடங்க விவசாயிகள் கோரிக்கை.


திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்தில், தற்போது சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்னதாக மேட்டூரில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியும், அதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடி பணிகள், நடைபெற்றது. 


இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, தமிழகத்தில் வழக்கத்திற்கு அதிகமாக மழை பெய்தபோதும் நன்னிலம் வட்டார பகுதியில், மழைப்பொழிவு என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, அமைந்திருந்ததால் இந்த ஆண்டு நன்னிலம் வட்டார பகுதியில், மகசூல் சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியோடு கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதையும் படியுங்கள்: மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் மூத்த குடிமக்களுக்கு மருத்துவம், சட்ட ஆலோசனை முகாம் மேலும், விவசாயப் பணிகளுக்கு தற்போது ஆள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் எந்திரங்களின் ஆதிக்கம் தொடங்கிய நிலையில் எந்திரங்கள் விரைந்து அறுவடை பணிகளை மேற்கொள்வதால், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், உடனடியாக கொள்முதல் செய்து கொள்ளக் கூடிய வகையில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உரிய காலத்திற்கு முன்பாக திறக்கப்பட்டு, விவசாயிகளின் விளைப்பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகளை தொடங்கி உள்ளார்கள். 


விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மேட்டூர் அணை நீர் திறப்பும் விவசாயிகள் அறுவடை செய்த நெற்களை, விற்பனைக்கு காத்திருக்காமல் விவசாயிகளின் நலன் பேணிக் காக்கக்கூடிய வகையில் உடனடியாக கொள்முதல் செய்யக்கூடிய வகையில், விவசாயிகளின் உணர்வுகளை உணர்ந்த அரசாக, இருந்து உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகளை, தொடங்கியதில் நன்னிலம் வட்டார விவசாயிகள், பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் செயல்பாடு விவசாயிகளின் நலனை பேணிக் காக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad