நன்னிலம் அருகே 2500 பாக்கெட் சாராயத்தை காருடன் பறிமுதல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 January 2023

நன்னிலம் அருகே 2500 பாக்கெட் சாராயத்தை காருடன் பறிமுதல்.


நன்னிலம் அருகே 2500 பாக்கெட் சாராயத்தை காருடன் பறிமுதல்; தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருக்கொட்டாரம் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்ய முயன்றனர். அப்போது காரை வயலில் இறக்கி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். 


இதையடுத்து போலீசார் காரில் சோதனை செய்த போது, அதில் புதுச்சேரி சாராயம் பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. காரில் இருந்த 75 ஆயிரம் மதிப்புள்ள 2500 பாக்கெட் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad