சாகுபடி தொடங்கிய நாளிலிருந்து பருவநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விவசாயிகள் சந்தித்து அதிலிருந்து மீண்டு தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே செம்பியம்மலை பகுதியில் விவசாயிகள் நெல் பயிர்களுக்கு வெற்றிலை நிஜாம் வாழைப்பழம் பூ உள்ளிட்ட பொருட்களை வைத்து படைத்து தீபாரணை காண்பித்து சூரியனுக்கு வழிபாடு செய்த பின்னர் விவசாயியில் அறிவாளால் அறுவடை செய்த பின்னர்.இயந்திர அறுவடை பணி களை தொடங்கினர். ஒரு ஏக்கருக்கு 30 மூட்டை நெல் மணிகள் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து நன்னிலம் திருக்கண்டீஸ்வரம் சன்னாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அறுவடை இயந்திரங்கள் அரசு வேளாண்மை துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் வாடகையை அரசு நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு தடையில்லாமல் அறுவடை செய்வதற்கு அறுவடை இயந்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment