நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கான, வட்டார அளவிலான கலை திருவிழா - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 4 December 2022

நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கான, வட்டார அளவிலான கலை திருவிழா

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கான, வட்டார அளவிலான கலை திருவிழா, நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் தலைமை தாங்கினார்.

நன்னிலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பழனிவேல், வட்டார வளமைய மேற்பார்வையாளர் நடேஸ்துரை, வட்டார கல்வி அலுவலர்கள் மணி, முருகபாஸ்கர் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்தனர்.


இதில் நன்னிலம் வட்டாரத்தை சேர்ந்த 7 உயர்நிலை பள்ளிகள், 16 நடுநிலை பள்ளிகள், 11 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த சுமார் 380-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


போட்டியானது கவின் கலை, நுண் கலை, இசைப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம் மொழித்திறன் ஆகிய ஆறு தலைப்புகளின் கீழ் தமிழகத்தின் பாரம்பரிய பண்பாட்டு நினைவுகளை போற்றி பாதுகாக்க கூடிய வகையில், தமிழ் இலக்கியம் கூறும் கலைகளை பாதுகாக்கும் வகையில் புத்துணர்வு ஊட்டக்கூடிய வகையில் நடைபெற்றது.

இதில் மாணவ- மாணவிகள் ஏராள–மாணவர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற கலைக்குழு மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் கலை திருவிழாவில் பங்கேற்க தகுதி பெறுவர்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad