நாட்டிலேயே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் உள்ள ஸ்ரீஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினறுமான பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் சாமி தரிசனம் செய்தார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்..அப்போது விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி என சொல்லி கொஞ்சம் பேருக்கு முழுமையாக தள்ளுபடி வந்துள்ளது. விவசாயிகளுக்கு திருப்தி இல்லை இதனை கண்டித்து விவசாயிகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளோம் கும்பேகோணத்தில் காவலர் கையை முறித்து வன்முறை சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளார்கள் தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது அதனை நிரந்தரமாக மூட வேண்டும் அதில் ஒரு கடை கூட மூடவில்லை என குற்றசாட்டு எழுந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது இதனை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. மாற்றம் வேணும் என்று விஜய் வந்தால் அனைத்து பிரச்சனைக்கும் திர்வு கானுவார் என்று நினைத்து வாக்களித்துள்ளார்கள். குற்றசம்பவத்தில் ஈடுபடுவோர் மீது இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் பாலியல் வன் கொடுமைகளுக்கு திர்வு காண வேண்டும் என்றால் அரபு நாடுகள் போல தண்டணை வழங்க வேண்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் நடைபெற்று வருகிறது பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு என்கவுன்டர் மட்டும் தான் இதற்கு தீர்வு என தெரிவித்தார்.

No comments:
Post a Comment