மன்னார்குடியின் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் 500க்கும் மேறபட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 28 May 2026

மன்னார்குடியின் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் 500க்கும் மேறபட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது..

 


ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 2000 முதல் 3000 பேருக்கு விருந்து அளிக்க வேண்டும் என தவெக மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பட்டினி இல்லாத உலகத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட மற்றும் தொகுதி செயலாளர்களுக்கு முதல்வர் விஜய் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். உலகளவில் பட்டினியால் வாடும் மில்லியன் கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வறுமைக்கு நிலையான தீர்வுகளைக் கண்டறியவும் 2011-ஆம் ஆண்டு முதல் ‘தி ஹங்கர் ப்ராஜெக்ட்’ அமைப்பால் துவங்கப்பட்ட உலக பட்டினி தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 28 கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் யூ.வி.எம்.ராஜாராஜன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சுவைமிக்க உணவுப் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad