திருவாரூர், நவம்பர் 07 -
திருவாரூர் நகரில் செயல்பட்டு வரும் சிறுவர் காப்பகங்களில் இருந்து மூன்று பேர் ஒரே நாளில் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில் உள்ள “ஆரூரான் மாணவர் இல்லம்” எனும் பாதுகாப்பு நிலையத்தில் பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி தஞ்சாவூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி செல்லும் பயணிகள் ரயிலில் தனியாக பயணித்த 15 வயது சிறுவனை ரயில்வே போலீசார் பிடித்து, விசாரணை நடத்தி திருவாரூர் ஆரூரான் மாணவர் இல்லத்தில் சேர்த்தனர்.
நேற்று மாலை, அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது யாரும் கவனிக்காத நேரத்தில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இல்ல பாதுகாவலர் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர். அதேபோல், திருவாரூர் நகரிலுள்ள மாணவிகளுக்கான பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமி (திருவாரூர்) மற்றும் 13 வயது சிறுமி (மன்னார்குடி) ஆகியோர் நேற்று தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து இல்ல காப்பாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ஆகிய மூவர் காப்பகங்களில் இருந்து தப்பிச் சென்றிருப்பது திருவாரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)
No comments:
Post a Comment