சமுதாய சீரழிவிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியான இளைஞர்களின்; சீரழிவிற்கு காரணமான போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி கூத்தாநல்லூரில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியானது கூத்தாநல்லூரில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று லெட்சுமாங்குடி அரசு மருத்துவமனையின் வாயில் முன்பு முடிவடைந்தது.
இந்த பேரணியில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் , பெரியவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மது ,உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கி பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment