தமிழக அரசின் கூட்டுறவு அங்காடி ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வழங்கப்படவில்லை திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் சொந்த திருவாரூர் மாவட்டத்தின் பொதுமக்கள் குற்றச்சாட்டு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 19 June 2024

தமிழக அரசின் கூட்டுறவு அங்காடி ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வழங்கப்படவில்லை திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் சொந்த திருவாரூர் மாவட்டத்தின் பொதுமக்கள் குற்றச்சாட்டு.


தமிழகத்திலேயே அதிக குடிசை வீடுகள் உள்ள மாவட்டமாகவும் விவசாயம் மற்றும் கால்நடைகளை  நம்பி வாழ்வாதாரத்தை நடத்தி வரும்  பெரும்பாலான மக்கள் கொண்ட மாவட்டமாகவும் திருவாரூர் நாகப்பட்டினம்  தஞ்சாவூர் உள்ளிட்ட  மாவட்டங்கள் விளங்கி சார்ந்து வருகிறது.


எனவே விவசாய. தின கூலி மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்றவற்றை நம்பி இங்கு பெரும்பாலான மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில்  வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களை தங்கள் தினசரி சமையலில் பயன்படுத்து பவர்களாகவும் இருக்கிறார்கள்.


திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் பகுதி நேர முழு நேர 742 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. 3 லட்சத்து 91 ஆயிரத்து 136 குடும்ப அட்டைகள் உள்ளன.


குறிப்பாக திருவாரூர் மாவட்ட ரேஷன் அங்காடி கடைகளுக்கு சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் மாதத்திற்கு மூன்று லட்சத்துக்கு 20,000 க்கும் மேற்பட்ட பாமாயில் பாக்கெட்டுகளும் 2 லட்சத்து 94 ஆயிரம் கிலோ துவரம் பருப்பும் அனுப்பப்பட்டு வருகிறது.


இந்த ஆயில் ரேஷன் கடையில்  ஒரு லிட்டர்  25 ரூபாய்க்கும் துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்குக்கும் விற்பனை செய்யப்படுகிறது இதனை இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் வாங்கி தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வந்தனர்.


இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக இந்த சிறப்பு  பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் வழங்கப்படும்  பருப்பு மற்றும் ஆயில் திருவாரூர்   மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உரிய முறையில் வருவதில்லை என்றும் இதனால் விவசாய தினக் கூலிகளும் விவசாயிகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது குறிப்பாக இன்றைய நிலையில் பாமாயில் குறைந்தபட்சம்  ஒரு லிட்டர் 150 ரூபாய்க்கும் துவரம் பருப்பு  ஒரு கிலோ  200 ரூபாய் வரைக்கும் வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது 


இதன் காரணமாக அன்றாடம் தினக்கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வரும் பொதுமக்கள் பெரும்பாலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்  அரிசி பாமாயில் துவரம் பருப்பு சீனி  உள்ளிட்டவைகளை நம்பியே   நடத்தி வருகின்றனர்  குறிப்பாக இந்த மாதத்தில் 17ஆம் தேதியை கடந்தும்  பிறகும் துவரம் பருப்பும் பாமாயிலும் இதுவரை ரேஷன் கடைகளுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.


கடை ஊழியரிடம் கேட்டால் மாத.  இறுதி நாளில் வந்து விடும் என்று தெரிவிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கடந்த இரண்டு மாதமாக கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்படவில்லை                   என்று தகவல் வருகிறது


குறிப்பாக பொதுமக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு இதுவரை ரேஷன் கடைகளுக்கு பாமாயில் துவரம் பருப்பு போன்ற பொருட்கள்  வராதது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய கூடிய ஆயில்  பருப்பு போன்றவை இதுவரை வராமல் இருப்பதும் மாதக் கடைசியில்  வந்து விடும் என்று எவ்வித உத்திரவாதமும் இல்லாத நிலையில் கடை ஊழியர்கள் அந்த உத்திரவாதத்தை கொடுத்து வருவதாலும் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்


இந்த நிலையில் மேலும் கோடை காலம் என்பதாலும் விவசாய தினக்கூலி  வேலைகளும் பெருமளவு இல்லாத காரணத்தினால் பொதுமக்கள்  ஏற்கனவே பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வரக்கூடிய நிலையில் தற்போது  அத்தியாவசிய பொருளான. பாமாயில் மற்றும்   துவரம் பருப்பு ரேஷன் கடைகளில் கிடைக்காதது.


அவர்களுக்கு  மேலும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது ஏற்கனவே ரேஷன் கடைகளில் அரை லிட்டர் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவும்    குறைக்கப்பட்டு இருநூறு  மில்லி வழங்கப்பட்டு  வரும் நிலையில்  தற்போது  அத்தியாவசிய பொருளான. பாமாயிலும் பருப்பும்  இந்த மாதம் கிடைப்பதற்கான எவ்வித உறுதியும்  திமுக அரசால் வழங்கப்படாத நிலையில் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad