பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-2024 ஆம் ஆண்டின் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 22 June 2024

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-2024 ஆம் ஆண்டின் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-2024ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுத்தந்த தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்.

திருவாரூர் மாவட்டத்தில் 2023-2024ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுத்தந்த அரசு  அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள்  முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு பாராட்டு மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் சிறப்பித்தார்.

 

இதில் 10ஆம் வகுப்பில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுத்தந்த 72 தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களும் 535 ஆசிரியர்களுக்கும் அதேபோல் 12ஆம் வகுப்பில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுத்தந்த 32 தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களும் 666 ஆசிரியர்களும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்ட சுற்றுச்சுழல் மன்றத்தின் சார்பாக பாராட்டு சான்றிதழ் பெற்ற தலைமையாசிரியர் களுக்கும் முதல்வர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் என மொத்தம் 1500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆசியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad