கொரடாச்சேரியில் 12ஆம் வகுப்பு மற்றும்10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்க செயின் மற்றும் தங்க நாணயங்களை மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ வழங்கினார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 19 June 2024

கொரடாச்சேரியில் 12ஆம் வகுப்பு மற்றும்10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்க செயின் மற்றும் தங்க நாணயங்களை மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ வழங்கினார்.


திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு மற்றும் 10 ம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாவட்ட அளவிலும், பள்ளியளவிலும் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  பூண்டி நினைவு  டவுன் கிளப் சார்பில் தங்க சங்கிலி மற்றும் தங்க நாணயம் வழங்கும் விழா 36-வது ஆண்டாக கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்து கொண்டார். 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் பள்ளியளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி வைஷ்ணவிக்கு ஒரு பவுன் தங்க செயின் மற்றும் அரை பவுன் தங்க நாணயத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அணிவித்தார். 


அதே போன்று 10ம் வகுப்பு அரசு பொது தேர்வில் பள்ளியளவில் முதலிடமும், மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்ற துர்காதேவி என்கிற மாணவிக்கு தங்க சங்கிலி மற்றும் தங்க நாணயம் மொத்தம் ஒரு பவுனும்,  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவர்களுக்கு தலா அரை பவுன் நாணயமும்,


10ம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு அரை பவுன் நாணயமும் வழங்கி பாராட்டப்பட்டனர். தொடர்ந்து பள்ளியளவில் அதிக மதிப்பெண் பெற்ற 50 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.  மாணவர்களுக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் 40 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 


இநநிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள், ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா பாலசந்தர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad