இந்த நிலையில்.. இவர்களது உறவினர் வீடு குடிபுகும் விழா மற்றும் மணக்கால் பகுதியில் நடைபெறும் திருமண விழாவிற்கும். திமுக திருவாரூர் மாவட்ட செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் கலந்து கொள்ள உள்ள நிலையில். மணக்கால் பகுதியில் சாலை ஓரத்தில் திமுக கொடி கம்பம் நடப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மிகவும் தாழ்வாக செல்லக்கூடிய உயர் மின்னழுத்த மின்கம்பியில் திமுக கொடி கம்பம் உரசி கொடி கம்பத்தில் மின்சாரம் பயந்துள்ள நிலையில். கோகுல் அந்த திமுக கொடி கம்பத்தை தொட்டுள்ளார்.. கோகுல் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் கோகுல் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அமரர் ஊர்தியில் அனுப்பி வைத்துள்ளனர்.
கோகுலின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மின்சார வாரியத்தின் மீது குடவாசல் காவல் நிலையத்தில் உயிரிழந்த கோகுலின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கோகுலின் உடலை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இந்த உயிரிழப்பிற்கு மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் என கோகுலின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சம்பவ இடத்திற்கு திருவாரூர் மாவட்ட காவல் துறையினர் அசம்பாவிதம் நடைபெறாமல் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக அந்த பகுதிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment