இவ்விழாவின் 9ஆம் நாளான இன்று அதிகாலை அருள்மிகு சண்முகபெருமானுக்கு வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைப்பெற்று ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மேள தாளங்கள் முழங்க புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
பின்னர் தேரில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் தேரினை வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கிவைத்தனர்.
அதனை தொடர்ந்து திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து நான்கு ரத வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் கோவிலை சென்றடைந்தது. பின்னர் முருகப்பெருமானுக்கு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment