மக்களிடம் அன்பை பகிர்ந்து கொண்டவர் எம்ஜிஆர். திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேச்சு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 18 January 2024

மக்களிடம் அன்பை பகிர்ந்து கொண்டவர் எம்ஜிஆர். திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேச்சு.


திருவாரூரில் எம்ஜிஆர் அவர்களின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் புதுத்தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். 

மேலும் புதுத்தெரு வார்டு கழகம் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் இரா.காமராஜ் எம்எல்ஏ பேசியதாவது, தமிழக மக்களுக்கு உண்மையான தொண்டு செய்ய வேண்டும் இன்று நோக்கத்தோடு எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். மக்களோடு மக்களாக பணியாற்றி அன்பை பகிர்ந்து கொண்டவர் எம்ஜிஆர். அவருடைய வழியில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அதிமுகவை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளனர். 


மக்களின் புனிதர் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக தேய்பிறை இல்லாமல் வளர்ந்து வருகிறது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது வழியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நல்லாட்சி மீண்டும் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இந்த நம்பிக்கை வருகின்ற தேர்தல்களில் எதிரொலிக்கும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேசினார். முன்னதாக திருவாரூர் விளமல் பாலத்திலிருந்து, புதுத்தெரு எம்ஜிஆர் சிலை வரையில் இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. 


இந்நிகழ்வுகளில் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி, மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், நகரச் செயலாளர் மூர்த்தி, ஒன்றியச் செயலாளர்கள் மணிகண்டன் மற்றும் செந்தில், மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, கலியபெருமாள், ரயில் பாஸ்கர், கூரியர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad