75வது குடியரசு தினவிழா தேசிய கொடியை ஏற்றி வைத்து 31 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 766 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 January 2024

75வது குடியரசு தினவிழா தேசிய கொடியை ஏற்றி வைத்து 31 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 766 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்.


திருவாரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 75வது குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து 31 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 766 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சி.ப்ரியங்கா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில்; நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ. தேசிய கொடியை ஏற்றி வைத்து,  காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல்துறையை சேர்ந்தவர்ளுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள், நற்சான்றிதழ்களும், 296 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.


 பின்னர், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவித்தொகையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.51 மதிப்பிலான நலத்திட்ட உதவித்தொகையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 520 மதிப்பிலான இலவச தையல் இயந்திரம், இலவச சலவை பெட்டியும்,  தாட்கோ அலுவலகத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் 246 மதிப்பிலான சென்ட்ரிங் மற்றும் சுற்றுலா வாகனமும் ஆக மொத்தம் 31 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 766  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  கு.சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) .லதா, வருவாய் கோட்டாட்சியர்கள் .சங்கீதா,கீர்த்தணா மணி, மாவட்ட வழங்கல் அலுவலர்.கயல்விழி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.மு.தனபால் உள்ளிட்ட அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad