அதனை சரி செய்யாத நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கோவில்பத்து பகுதியை சேர்ந்த அஜய் என்பவரது மகன் அதியன் 2 வயது சிறுவன் வீட்டின் பின்புறமும் பள்ளியில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது . அதனை தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டுள்ளனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் செவி சாய்க்கவில்லை, இதனால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோவில் பத்து பகுதி மக்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளியிலிருந்து மாணவர்கள் வெளியேற முடியாமல் பள்ளியின் உள்ளே இருந்தனர்.
தகவல் அறிந்து வந்த வலங்கைமான் காவல்துறையினர் பள்ளி மாணவ , மாணவிகள் வீட்டிற்கு செல்ல வழிவிடுங்கள் என கேட்டு கொண்டதற்கு இனங்க தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு உடனடியாக இதற்கு தீர்வுகானாவிட்டால் நாளை காலை பள்ளி துவங்குவதற்கு முன்னதாகவே போராட்டத்தை தொடங்குவோம் என கூறி கலைந்து சென்றுள்ளனர் . இது குறித்து அப்பள்ளி தாளாளரிடம் கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது எனவும், போராட்டம் நடத்துபவர்களிடம் போய் கேளுங்கள் என தெரிவித்துள்ளார் .
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment