திருச்சுழி அருகே உடையனாம்பட்டியில் பசுமை கிராம திட்டத்தில் இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 25 July 2023

திருச்சுழி அருகே உடையனாம்பட்டியில் பசுமை கிராம திட்டத்தில் இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கல்.


விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உடையனாம்பட்டியில், பசுமை கிராம திட்டம் துவங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் உடையனாம்பட்டி ஊராட்சி மற்றும் காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் இணைந்து  பசுமை கிராம திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  அதன்பேரில், இல்லங்கள் தோறும் தென்னைங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்  பள்ளியில் நடைபெற்றது. 

ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமுருகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சண்முகநாதன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில், இல்லத்தரசிகளிடம்   தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்,   கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் பணித்தள பொறுப்பாளர் வினோதினி மாலை நேர கல்வி மைய பயிற்றுநர்கள் ராமலட்சுமி, புவனா மற்றும் பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad