திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுக்காவிற்கு உட்பட்ட நீலகண்ட சாஸ்தரி என்பவருக்கு 1439 சதுர அடிக்கு 350 சதுர மீட்டர் அளவுள்ள சொந்தமான இடத்தை கடந்த 2011ம் ஆண்டு சாமிநாதபிரசாத் என்பவர் தனது மனைவி லலிதா என்பவர் பெயரில் விலைக்கு வாங்கியுள்ளார் .
இந்நிலையில் லலிதாவிற்கு சொந்தமான இடத்தின் முன்பக்கம் சுமார் 1000 சதுரடி பரப்பளவிலான இடத்தினை அத்துமீறி ஆக்கிரமித்து அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு என பள்ளிக்கல்வித்துறை புதிதாக கட்டிடம் ஒன்றை கட்டியுள்ளது. தனிநபருக்கு சொந்தமான இடம் என பள்ளிகல்வித்துறை நிர்வாகத்திற்கு தெரியவந்தும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பள்ளி கல்வித்துறை அராஜகமாக ஆக்கிரமித்துள்ளது .
இதுசம்மந்தமாக இடத்தின் உரிமையாளர் லலிதா பள்ளிகல்வித்துறை , உயர் அதிகாரிகள் , நீடாமங்கலம் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் , வருவாய் துறை அதிகாரிகள், என சம்மந்தப்பட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கு நேரிலும், கடிதம் வாயிலாகவும் பலமுறை புகார் மனு அளித்தபோதிலும் எந்தவித தீர்வும் காணப்படவில்லை.
அரசு நிர்வாகம் என்பது மக்களுக்காக இருக்கவேண்டுமே தவிர குண்டர்களை போலவும், தாதாக்களை போலவும் இருக்குமேயானால் மக்கள் யாரை நம்பி புகார் அளிப்பது என கேள்வி எழுப்பும் இடத்தின் உரிமையாளர் லலிதா , வேலியே பயிரை மேய்ந்த கதையாக தற்போதைய அரசு நிர்வாகம் இருந்துவருகிறது என மனவேதனை தெரிவித்துள்ளார்.
அரசு நிர்வாகத்தின் அத்துமீறிய ஆக்கிரமிப்பினை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு , அதிகாரிகளை பணி நீக்கம் செய்து சாதாரண பொதுமக்களுக்கு ஆட்சியாளர்கள் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என இப்பிரச்சனை குறித்து கோரிக்கை விடுத்துள்ளனர் .
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment