ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா மூலம் நீர் நிலைகளை தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் நில ஒருங்கிணைப்பு மசோதாவை கைவிட வலியுறுத்தியதோடு மத்தியில் ஆளும் பாஜக அரசு நுகர்வோர்களின் நலனை பாதிக்கக் கூடிய வகையில் நுகர்வோர்கள் கருத்தறியாமல் செறிவூட்டிய கலப்பு அரிசி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டி வலியுறுத்தினர்.

தொடர்ந்து போராட்டத்தில் நுகர்வோர், விவசாயிகள் ஆகியோர்களுக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஜோசப், மாவட்ட பொருளாளர் கலியபெருமாள், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், சதாசிவம், கலியபெருமாள், மகேந்திரன், ராஜேந்திரன், செல்வன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment