நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடி அருகே விவசாயிகள் ஒன்றிய அரசை கண்டித்து நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 5 April 2023

நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடி அருகே விவசாயிகள் ஒன்றிய அரசை கண்டித்து நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


காவிரி டெல்டா பகுதியான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பழுப்பு நிலக்கரி வட்டாரத்தில், 68 சதுர கிமீ கொண்ட வடசேரி பகுதியில் நிலக்கரியாகவோ, நிலக்கரி படுகை மீத்தேனாகவோ மற்றும் நிலத்தடி நிலக்கரியை வாயுவாகவோ எடுக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கடந்த 29.03.2023 அன்று ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் அழைப்பாணை விடுத்துள்ளது. 

மத்திய நிலக்கரி அமைச்சகம் நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதை சார்ந்த பொருட்களை எடுக்க விடுக்கப்பட்ட அழைப்பாணையின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் மூன்று இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அரியலூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும் அந்த அழைப்பாணையின் படி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் எதிர்வரும் மே 30 ந் தேதி மேற்கண்ட 101 இடங்களுக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்களுள், தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் குறித்து, தேர்வு குழுவால், 2023 ஜூலை 14 அன்று ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை, அண்டமி, மோகூர் கருப்பூர்,பரவாத்தூர், கண்ணுகுடி, கொடியாளம், வடசேரி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, கண்ணாரப்பேட்டை, கூப்பாச்சிக் கோட்டை, பரவாக்கோட்டை மற்றும் தளிக்கோட்டை பகுதிகளை உள்ளடக்கியது வடசேரி இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்ள கூடாது எனவும் முற்போகம் விளையும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களை கொண்ட இப்பகுதியில் இத்திட்டம் செயல்படுத்துவதால் விவசாயத்திற்கும் நில வளத்திற்கும், நிலத்தடி நீருக்கும் பாதிக்கப்பட்டு இப்பகுதி பாலைவனமாகவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


இதனை கண்டித்து திருவாரூர் மாவட்டம் உள்ளிகோட்டை என்ற இடத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் ஒன்றிய அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்களை எழுப்பி நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் எனவே ஒன்றிய அரசு திட்டத்திற்கு வழங்கிய அனுமதியை கொள்கைப்பூர்வமாக திரும்ப பெற முன்னுர வேண்டும் தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் இல்லையெனில் அரசியல் கட்சிகள் விவசாயிகள் இணைந்து தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்துள்ளனர்‌.



- செய்தியாளர் தருண் சுரேஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad