திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெள்ளமதகு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் விளைநிலத்தில் விவசாய தொழிலையே பிரதானமாக செய்து வருகின்றனர். இவர்களுக்கென அரசாங்கத்தின் சார்பில் நான்கு கலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று களங்கள் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் சார்பில் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்ட ஒரு கலத்தை நம்பியே இவர்கள் விவசாயப் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர்.

தற்பொழுது அந்தக் களத்துக்கு அருகில் உள்ள நிலத்தை தனிநபர் ஒருவர் வாங்கியதாகவும், மேலும் அந்தக் களம் தனக்கு சொந்தமானது எனக் கூறி சிமெண்ட் தரையை ஜேசிபி கொண்டு பெயர்த்து பிளாட்டாக மாற்றி விற்பனை செய்வதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இது குறித்து நீடாமங்கலம் காவல் நிலையம் வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து தரப்பு அதிகாரிகளிடமும் முறையிட்டும் தீர்வும் கிடைக்கவில்லை என அப்போது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனையடுத்து இறுதி கட்டமாக இன்றைய தினம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி கிராம மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் திரளாக வந்து மனு அளித்தனர். தங்கள் வாழ்வாதாரமான அந்த களத்தை உடனடியாக மீட்டு தர வேண்டிய கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் ரா.பிரியங்கா.
No comments:
Post a Comment