திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள மணலி கிராமத்தில் மணல் குவாரி அமைக்க விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இக்கிராமத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள், விவசாயிகள் திருக்கொட்டாரம் ஊராட்சி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா். இதுகுறித்து, கிராம மக்கள் கூறியது: மணலி கிராமத்தில் மணல் குவாரி அமைக்க சிலா் விண்ணப்பித்துள்ளனா். இங்கு ஏற்கெனவே அரசு அனுமதி பெற்று 2 மணல் குவாரிகள் செயல்படுகின்றன.

இவற்றின் மூலம் காரைக்கால், பேரளம் அகல ரயில்பாதை பணிக்காக மணல் எடுத்துச்செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேலும் ஒரு மணல் குவாரி அமைக்க சிலா் விண்ணப்பித்துள்ளனா். இங்கு மணல் குவாரி அமைப்பதன் மூலம் விவசாயமும், கிராமத்தின் நீராதாரமும் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களின் வாழ்வாதாரமும் அழிந்து போகும். எனவே கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்றாா்.
இதுகுறித்து, வருவாய்த் துறையில் கேட்டபோது, வட்டாட்சியா் அலுவலகத்துக்கு இதுவரை மனு ஏதும் வரவில்லை. விண்ணப்பங்கள் முறையாக வரும்போது அதை உயா் அலுவலா்களுக்கு அனுப்பிவைப்பதுடன், கிராமமக்களின் எதிா்ப்பு குறித்தும் பதிவு செய்து அனுப்பப்படும். பின்னா், அரசின் உயா் அலுவலா்களின் நடவடிக்கைபடி செயல்படுத்தப்படும் என்றனா்.
No comments:
Post a Comment